ரம்ஜான் ஈகை பெருநாள் கொண்டாட்டம்… குழந்தைகள் சிறப்பு தொழுகை….!

Author: Babu Lakshmanan
3 May 2022, 8:10 am

உக்கடம் ரோஸ் கார்டன் நண்பர்கள் பொதுநல சங்கம் சார்பில் ரம்ஜான் ஈகை பெருநாள் கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.

புனித ரமலான் மாதமான நேற்றுடன் இப்தார் முடிவடைந்த நிலையில், கோவை உக்கடம் பகுதியில் ரோஸ் கார்டன் நண்பர்கள் பொதுநல சங்கம் சார்பில் ரம்ஜான் ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட்டது. முகமது உசேன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜிபி நாசர், இமாம்.சையத் அலி பாகவி, ரயில்வே ஜமீல், ஏஜாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தைகளுடன் சிறப்பு தொழுகை மற்றும் துவா நடத்தினர்.

புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!