மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம்

Author: kavin kumar
2 February 2022, 10:55 pm
Quick Share

புதுச்சேரி : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழகத்தை சார்ந்த 9 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 31ஆம் இரவு கோடியக்கரை கடற்பகுதியில் 9 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அதில் 3 மீனவர்கள் காரைக்கால் பகுதியையும், 6 மீனவர்கள் தமிழகப் பகுதியையும் சார்ந்தவர்கள். அவர்களது இயந்திரப் படகோடு, இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். பிடித்துச் செல்லப்பட்ட 9 மீனவர்களையும் விடுவிக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 672

0

0