ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் திடீர் ரெய்டு : ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்

Author: Babu Lakshmanan
6 December 2021, 2:16 pm
ranipet - updatenews360
Quick Share

வேலூர் : ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வருபவர் செல்வகுமார். இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வேலூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, உதவிபொறியாளரான செல்வகுமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தற்போது லாலாபேட்டை கிராமத்தில் உள்ள செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் DSP மதியழகன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர், காலை முதல் 3 மணிநேரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பொறியாளர் வீட்டில் 40 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு உண்டான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து சரிபார்த்து வருவதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 443

0

0