7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரம்: நீதிபதிகள் விசாரணை..

6 March 2021, 3:21 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே பன்னிமடையில் கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், சிறுமி உடலில் இருந்து எடுக்கப்பட்ட விந்தணுவை டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதில் இருவரின் விந்தணுக்கள் இருப்பதும் அதில் ஒன்று சந்தோஷ்குமாருடையது என்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் கடந்த 2020 டிசம்பர் 27 ம் தேதி குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டணை விதிக்கப்பட்டது.

இதில் தொடர்புடைய மற்றொரு நபர் யார் என்பது துடியலூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சந்மோஷ்குமாருக்கு தூக்கு தண்டணை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று பன்னிமடை கிராமத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரகாஷ், சிவஞானம் ஆகிய இருவரும் தற்போது நேரில் பன்னிமடை கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இறந்த சிறுமியின் வீடு மற்றும் அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்களிடம் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நீதிபதிகள் விசாரணை மேற்கொள்வதால் அந்த பகுதிக்கு ஊடகங்கள் செல்ல கூடாது என 2 கிலோ மீட்டர் முன்னதாகவே பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Views: - 12

0

0