கொத்தனாரால் கர்ப்பமான சிறுமி.. குழந்தையை பெற்றெடுத்து கொலை செய்ய முயன்ற கொடூரம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2024, 11:34 am

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நேற்று செவ்வாய் இரவு சுக்காம்பட்டி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் குழந்தை கத்தும் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் சென்று பார்த்த பொழுது பிறந்து சில மணி நேரங்களை ஆன ஆண் குழந்தை கழுத்து மற்றும் கை அறுபட்டு கிடந்தது.

குழந்தையை அப்பகுதியை சேர்ந்த மரியம் பீவி மீட்டு சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக திருப்பத்தூர் டிஎஸ்பி செல்வகுமார் சிங்கம்புணரி ஆய்வாளர் கவிதா உதவி ஆய்வாளர் லெனின் ஆகியோர் தீவிர விசாரணை செய்து வந்தனர் இன்று அதே பகுதியைச் சேர்ந்த அபிநயா (வயது 18) என்ற பெண் இந்த சம்பவத்தை செய்ததாக கண்டுபிடித்தனர்.

அவரை பிடித்து விசாரணை செய்த பொழுது அவர் வீட்டு அருகே வசிக்கும் திருமணமான கொத்தனார் மகேந்திரன் (வயது 42) தன்னை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதனால் தான் கர்ப்பமுற்றதாகவும் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிதான் பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்து வீசி சென்றதாக காவல்துறையினர் விசாரணையில் கூறியதாக தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து கொத்தனார் மகேந்திரனை கைது செய்த காவல்துறையினர் 10 மாதத்துக்கு முன்பு 17 வயது சிறுமியான அபிநயாவை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து மகேந்திரனையும் கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?