படகு மூலம் ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் : 2 டன் அரிசி பறிமுதல்!!

26 September 2020, 6:41 pm
Andhra Ration Rice - updatenews360
Quick Share

திருவள்ளூர் : பழவேற்காடு ஏரி வழியாக படகில் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடப்பாக்கம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் ரேஷன் அரிசிகளை பணம் கொடுத்து வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு பழவேற்காடு ஏரி வழியாக படகில் கடத்துவதாக காட்டூர் காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது முட்புதரில் மறைத்து வைத்து மாட்டுவண்டி மூலம் 40 மூட்டைகள் என சுமார் 2 டன் அரிசியை கொண்டு செல்ல முயன்றபோது காட்டூர் போலீஸார் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த ராமு என்பவரை கைது செய்தனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட ராமுவை திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்து, இரண்டு டன் ரேசன் அரிசி மற்றும் பறிமுதல் செய்தனர்.