நள்ளிரவில் ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை.! ஓட ஓட விரட்டிய கும்பல்.!!

17 August 2020, 1:41 pm
Pondy Murder - Updatenews360
Quick Share

புதுச்சேரி : கோயில் நில தகராறு காரனமாக ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகளை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வில்லியனூர் நடராஜ் நகர் பகுதியை சேர்தவர் வார்டு மணிகண்டன் என்கிற ராமச்சந்திரன் (வயது 45). இவர் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். இவர் நள்ளிரவில் வில்லியனூர் புறவழிச்சாலையில் தன் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து துரத்தினர்.

அவருடைய வாகனத்தில் மோதி அவரை கீழே தள்ளினர். இதையடுத்து சுதாரித்து கொண்ட மணிகண்டன் அங்கிருந்து சிறிது தூரம் ஒடி உள்ளார். அவரை விடாமல் துரத்திய மர்ம நபர்கள் அவரை அரிவாளால் கழுத்தில் வெட்டி உள்ளனர். அப்போது மறைந்து இருந்த மேலும் இரண்டு நபர்கள் அவரை சரமாரியாக கழுத்து மற்றும் உடல் பகுதியில் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர், இதில் முதற்கட்ட விசாரணையில் கோயில் நில தகராறு காரனமாக தான் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக கண்டுபிடித்த போலிசார் , கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நள்ளிரவில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒடஒட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.