காதலிக்க மறுப்பு… போதையில் சகோதரரின் புல்லட்டை எரித்த வாலிபர்!!

Author: Udayachandran
10 October 2020, 7:45 pm
Bike Fire - Updatenews360
Quick Share

சென்னை : பெண் காதலிக்க மறுத்ததால் இருசக்கர வாகனத்தை போதையில் தீ வைத்து கொளுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரம் ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் ( வயது 30 ). இவரது தங்கைக்கு கடந்த சில நாட்களாக அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி தெருவைச் சேர்ந்த தஸ்தாகீர் பாஷா (வயது 30) என்ற நபர் காதலிக்க கூறி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஏற்கனவே அயனாவரம் போலீசில் பெண் வீட்டார் புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று தஸ்தாகீர் பாஷா அந்த பெண்ணிடம் காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் அதை நிராகரித்து விட்டதால்  ஆத்திரமடைந்த தஸ்தாகீர் பாஷா நேற்று நள்ளிரவில் குடிபோதையில் பெண் வீட்டிற்குச் சென்று பெண் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். தீ எரிவதை கண்டு அக்கம்ப க்கத்தினர் தீயை அணைத்து உள்ளனர்.

இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தஸ்தாகீர் பாஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் பைக் எரிந்த சம்பவம் அயனாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 53

0

0