ரேஷன் கடை ஊழியர்களே…வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால்.! பதிவாளர் அனுப்பிய எச்சரிக்கை.!!

9 August 2020, 12:37 pm
Ration Shop Warning - Updatenews360
Quick Share

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலையில், பதிவாளர் நோட்டீஸ் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் கூட்டுறவு சங்க கடைகள் இந்த பணியை செய்கின்றன.

இந்தநிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு நிபந்தனைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அப்படி வேலை நிறுத்ததில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ‘No Work No Pay’ என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரித்துள்ளார். இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்களா இல்லையா என்பது குறித்து விரைவில் முடிவு வர வாய்ப்புள்ளது.