மருத்துவமனைக்கு செல்ல பயந்த உறவினர்கள் : பிரசவத்தின் போது தாயும், சேயும் பலியான பரிதாபம்!!

20 April 2021, 6:39 pm
Mother and Baby dead -Updatenews360
Quick Share

திருவள்ளூர் : மருத்துவமனைக்கு செல்ல பயந்து உறவினர்களே பிரசவம் பார்த்ததால், தாயும், பெண்குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த புதிய எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல்சூளையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் அங்கேயே தங்கி பணி செய்து வருகின்றனர்.

இதில், கோபு என்பவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், இவரது மனைவி, பூஜா (வயது 20), கர்ப்பமாக இருந்த நிலையில் பாடியநல்லுாரில் உள்ள அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் மகப்பேறுவிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த, பூஜா பயத்தில் மருத்துவமனை நிர்வாகத்தி்னருக்கு தெரிவிக்காமல் அங்கிருந்து செங்சூல் சூளைக்கு திரும்பி உள்ளார்.

வீடு திரும்பிய பூஜாவிற்கு, அன்றைய தினம் இரவு திடீரென கடுமயைான பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. பிரசவ வலி மேலும் அதிகரித்து ரத்த போக்கு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு செல்லாமல் உடன் இருந்தவர்களே பிரசவம் பார்த்து உள்ளனர்.

முறையான பிரசவ வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படாமல் மேற்கொள்ளப்பட்ட மகப்பேறு சிகிச்சை முறை பலனளிக்காமல், பூஜாவும், பிறந்த பெண் சிசுவும் பரிதாபமாக இறந்தனர்.

இறந்தவர்களை யாருக்கும் தெரியாமல் உறவினர்கள் அடக்க செய்ய திட்டமிட்ட போது, தகவலறிந்த கிராமத்தினர் உடனடியாக சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிரசவத்தின்போது இறந்த தாய் மற்றும் பெண் சிசுவின் உடல்களை போலீசார் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக, சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து அவரதுவிசாரித்து வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் செங்கல் சூளையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பணிபுரியும் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என கூறப்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

Views: - 92

0

0