5 வயதில் நிறைவேறாத ஆசையை 50 வயதில் நிறைவேற்றிய உறவினர்கள் : அசைவ விருந்துடன தடல் புடலாக நடந்த இல்ல விழா!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2022, 10:05 pm
Ear Peice - Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த செம்படை கிராமத்தைச் சேர்ந்த மொட்டையின் மகன் ஏழுமலை (வயது 50). இவர் விவசாய வேலை செய்து வருகிறார்.

இவருக்கு மனைவி சங்கீதா (வயது 45), மகன்கள் வேடியப்பன் (வயது 22), மணி (வயது 20) ஆகியோர் உள்ளனர். இவரது சிறு வயதில் குடும்ப ஏழ்மையின் காரணமாக மொட்டை அடித்து காது குத்தாமல் விட்டதாக கூறப்படுகிறது.

தனது ஆசையை பிள்ளை மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நினைத்த உறவினர்கள் அவருக்கு மொட்டை அடித்து காது குத்தி உள்ளனர்.

அவர்களது குலதெய்வ கோயிலில் நடந்த இந்த நிகழ்வில் அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் வரவழைக்கப்பட்டு அசைவ விருந்து வைக்கப்பட்டது. 5 வயதில் நிறைவேறாத தனது ஆசை 50 வயதில் பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் நிறைவேறியதால் நெகிழ்ச்சி அடைந்தார் ஏழுமலை.

Views: - 145

0

0