“எடப்பாடியை விடுதலை செய்“ : ஸ்டாலினைப் போல திமுக தொண்டர்களும் உளறல்!!

21 November 2020, 8:38 am
DMK - Updatenews360
Quick Share

திருப்பூர் : உதயநிதி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நடத்தில சாலைமறியல் போராட்டத்தில், எடப்பாடியை விடுதலை செய் என திமுக.,வினர் கோஷமிட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருக்குவளையில், உதயநிதி ஸ்டாலின் அனுமதியன்று கூட்டம் நடத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒருபகுதியாக, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட பொறுப்பாளர் இல. பத்மனாபன் தலைமையில் அவினாசி-சேவூர் சாலையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

இதில் கோஷமிட்ட திமுக நிர்வாகி ஒருவர் விடுதலை விடுதலை செய் எடப்பாடியை விடுதலை செய் என கோஷமிட்டார். உடன் அமர்ந்திருந்த கட்சியினரும், எடப்பாடியை விடுதலை செய் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சுதாரித்து கொண்ட கட்சியினர், உதயநிதியை விடுதலை செய் என மாற்றி கோஷமிட்டனர். இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்து மக்கள் சிரித்து கிண்டலடித்து வருகின்றனர். இப்படி ஒரு கட்சியினரை வைத்துக் கொண்டு திமுக எப்படி சட்டசபை தேர்தலை சமாளிக்க போறாங்களோ என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Views: - 27

0

0