சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்: தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் பட்டியல் வெளியீடு..!!

26 January 2021, 9:19 am
Quick Share

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையமும் தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மாற்றம் செய்ய விரும்பும் வாக்காளர்களுக்கு முகாம் நடத்தப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகள் பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதி வாரியாக தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டுள்ளார்.

Views: - 6

0

0