மடத்தில் இருந்து நீக்கியாச்சு.. மீறி வந்தால் நித்தியானந்தா கண்டிப்பாக கைது செய்யப்படுவார் : மதுரை ஆதீனம் காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2024, 2:09 pm

கோவில் நகரம் என அழைக்கக்கூடிய காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்திற்கு வருகை தந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த காஞ்சி மாநகரம் கோவில் நகரமாக அழைக்கப்படுகிறது, இந்த வழியில் திருஞானசம்பந்தர் நடந்து சென்றதால் இதற்கு பிள்ளையார் பாளையம் என அழைக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் ஒரு சிவன் கோயில் உள்ளது, தமிழ்நாட்டிலே ஐந்து பாடல் பெற்ற தளம் இங்கு தான் உள்ளது.

சிவஞான முனிவர் கட்சியப்பா முனிவர் வாழ்ந்த ஊர் இந்த ஊர், அம்பாள் பூஜை செய்த இடம் இந்த ஊர் என கூறிய பின்பு,

நித்தியானந்தாவை மடத்தை விட்டு நீக்கி ஆச்சு அப்படி வந்தாலும் நான் விடமாட்டேன். அவர் நாட்டுக்குள் வந்தாலே அரெஸ்ட், அரெஸ்ட் பண்ணிடுவாங்க என்றார் .

செய்தியாளர் இடைத்தேர்தலை பற்றி கேள்வி எழுப்பிய போது , இடைத்தேர்தல் என்பது நல்லது தான் இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி தான் வெற்றி பெறும், இல்லாவிட்டால் பாமகவும் வெற்றி பெற வாய்ப்பு உண்டு, அதிகம் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

சைவமடாதிபதிகள் அரசியல் கருத்துக்கள் கூறுவது தவறாக கருதப்படுகிறது என செய்தியாளர் கேள்வி எழுப்பியதும், அதற்கு பதில் அளிக்கும் விதமாக நானும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன், நானும் தமிழன் தான் எனக்கும் ஓட்டுரிமை உள்ளது, நான் பேசுவேன் தமிழனை குத்திக் கொலை கொலை பண்ணுகிறான் ஜெயிக்கிறான், இதை வருத்தத்துல நான் சொல்ல தான் செய்வேன், எனக்கு ஓட்டு உரிமை உள்ளது என கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!