கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க கோரிக்கை : மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

25 January 2021, 12:56 pm
Cbe Ambedkar- Updatenews360
Quick Share

கோவை : கோவை நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி அமைப்பின் மேற்கு மண்டல அமைப்பாளர் ராசன் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தார் அதில் கூறியிருப்பதாவது: வடகோவை டாடாபாத் உணவு பாதுகாப்பு கிடங்கு வளாகத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் திருவுருவ சிலை அமைத்து பல வருடங்கள் ஆகிறது. அந்த சிலை சிதிலமடைந்து வருகிறது. எனவே சிலையை சீரமைத்து தர வேண்டும்.

அம்பேத்கரின் நினைவு தினம் மற்றும் பிறந்த தினத்தில் பல்வேறு அமைப்புகள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த தினம் வருவதால் கோவை நீதிமன்ற வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையை அமைத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 0

0

0