திருப்பூரில் காவலர்களுக்கு உணவகம் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்!!

20 January 2021, 8:06 pm
Police Canteen- Updatenews360
Quick Share

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் நல உணவகத்தை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

திருப்பூர் பல்லடம் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கான உணவகம் இன்று திறக்கப்பட்டது.

காவலர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் .

இந்நிகழ்ச்சியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா , மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமிட்டல் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Views: - 13

0

0