வழக்கு போடுவதாக மிரட்டும் ஓய்வு பெற்ற முன்னாள் டிஎஸ்பி : கோவை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் அறிவுறுத்தல்!
Author: Udayachandran RadhaKrishnan28 January 2024, 2:38 pm
வழக்கு போடுவதாக மிரட்டும் ஓய்வு பெற்ற முன்னாள் டிஎஸ்பி : கோவை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் அறிவுறுத்தல்!
கோவை மாநகராட்சியில் புதிய ஆணையராக பொறுப்பேற்ற சிவகுரு பிரபாகரன் அவர்கள் சாலை பணிகள் மற்றும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது அவை தரமற்ற முறையில் இருப்பதாக அபராதம் விதித்தார். ஒப்பந்ததாரர்கள் அதை சரி செய்த பின் பில் தொகையை பெற்றுக் கொண்டனர்.
இதற்கிடையில், லஞ்ச ஒழிப்புத்துறையில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி அவர்கள், ஒப்பந்ததாரர்களை மறைமுகமாக தொடர்பு கொண்டு, தரமற்ற சாலைகளை அமைத்துள்ளதால் உங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்ய முடியும். அதை தவிர்க்க லஞ்சம் கேட்டு FACE TIME கால் மூலம் வந்து மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் செயலாளர் மற்றும் KCP Infra Limited நிறுவனத்தின் தலைவருமான K.Chandraprakash அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாவது, ஒப்பந்ததாரர்களால் அமைக்கப்படும் சாலைகள் தரமற்ற நிலையில் உள்ளதாக ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள் அபராதம் விதிக்கிறார்கள்.
ஆனால் தரமற்ற பணிகளை மேற்கொண்டதால் லஞ்ச ஒழிப்பு வழக்கை பதிவு செய்ய முடியும் என ஓய்வு பெற்ற முன்னாள் டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி ஒப்பந்ததாரர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
அப்படி ஒப்பந்தாரர்களை மிரட்டும் அதிகாரிகளுக்கு பயப்பட்டு பணத்தை கொடுக்க வேண்டாம். எந்த புகார் வந்தாலும் நமது ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தில் புகாரை தெரிவிக்க வேண்டும்.
மொபைல் காலில் உங்களுக்கு மிரட்டல் வந்தால் அந்த ஆடியோவை ஆதாரமாக கொடுத்து புகார் கொடுக்கலாம். டிராக் செய்ய முடியாதபடி FACE TIME காலிலோ, வாட்ஸ் அப் காலிலோ வந்தால் அதற்கும் தற்போது செயலிகள் உள்ளது என்றும், தங்களுக்காக எப்போதும் நலச்சங்கம் துணை நிற்கும் என அவர் கூறியுள்ளார்.
0
0