கோயில் சொத்தில் கை வைத்தால்.. ஓய்வு பெற்ற காவல்துறை தலைவர் பொன் மாணிக்கவேல் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2023, 11:31 am

கோயில் சொத்தில் கை வைத்தால்.. ஓய்வு பெற்ற காவல் தலைவர் பொன் மாணிக்கவேல் எச்சரிக்கை!!

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட சாத்தனூர் திருமூலர் அவதார தலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரு பூஜை விழாவில் பங்கேற்ற பொன். மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: சேர, சோழர் காலத்து சொத்துகளிலிருந்து மாதந்தோறும் வரும் ரூ. 28 கோடி வருமானத்தைக் கொண்டு, அறநிலையத் துறை அமைச்சர் உள்பட அத்துறையிலுள்ள அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை ஊதியமாக வழங்குவது சரியா, தவறா என்பதை அடுத்த முறை பேசுகிறேன்.

கடந்த ஒரு வாரமாக என்னைப் பற்றி சிலர் அவதூறாக பேசுகின்றனர். இதற்கு தமிழக அரசின் தூண்டுதல்தான் காரணம். கோயிலில் கை வைத்தால் நாங்கள் எதிர்ப்போம்.

அதேபோல, திருட்டு போன கோயில் சிலைகளை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், எங்கள் மூச்சு உள்ளவரை போராடுவோம் என்றார் பொன் மாணிக்கவேல்.

  • bayilvan ranganathan review retro movie முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!