ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆம்புலன்ஸில் வந்த ஒய்வு பெற்ற ஆசிரியர்! கோவையில் பரபரப்பு!!
14 September 2020, 2:12 pmகோவை : ஆதார் அட்டையை பெற ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் ஓய்வு பெற்ற ஆசிரியர் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கனுவாய் பகுதியை சேர்ந்தவர் ஜூலியா எலிசபத் (வயது 60). இவர் ஒய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன் மொபட்டில் செல்லும் போது விபத்தில் சிக்கினார். இதில் வலது காயில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் கடந்த 4 வருடங்களாக நடக்க முடியாமல் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு வரவேண்டிய ஒய்வூதியம் சில மாதங்களாக வரவில்லை. அதற்காக மீண்டும் விண்ணப்பிக்கும் போது ஆதார் கார்ட்டில் திருத்தம் செய்ய வேண்டும் என அரசு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்காக கவுண்டம்பாளையத்தில் உள்ள இ சேவை மையத்திற்கு அவரது மகள் சென்று நிலைமையை எடுத்து கூறியுள்ளார். அப்போது ஜூலியா எலிபசத்தை நேரில் அழைத்து வர வேண்டும் என இ சேவை மைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஆதார் கார்டு மிகவும் அவசரமாக தேவைப்படுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அவர் அழைத்துவிட்டார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
0
0