ராணுவப் பணி முடிந்து ஓய்வு.! தமிழகம் திரும்பியவருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு.!!

2 August 2020, 3:28 pm
Pondy Army Man - Updatenews360
Quick Share

புதுச்சேரி : 21 ஆண்டு காலம் ராணுவத்தில் பணி முடித்த பின்பு சொந்த ஊருக்குத் திரும்பிய ராணுவ வீரரை பொதுமக்கள் மேளதாளத்துடன் அமோக வரவேற்பு அளித்தனர்.

புதுச்சேரி, காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் 1999 ஆம் ஆண்டு இராணுவ பணியில் சேர்ந்தார்.

சசிக்குமார் கார்கில் போர், ஜம்மு காஷ்மீர் எல்லை , பங்களாதேஷ் எல்லை பகுதிகளிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் 21 ஆண்டு காலம் ராணுவப் பணி முடிந்து சொந்த ஊருக்கு இன்று திரும்பிய சசிகுமாரை எல்லை பகுதியில் இருந்து பொதுமக்கள் மேளதாளத்துடன் நடனமாடி வழிநெடுகிலும் அவருக்கு மலர் தூவி மாலை அணிவித்து அமோக வரவேற்பு அளித்தனர்.

Views: - 0

0

0