வனத்துறையின் கூண்டில் சிக்கியது ரிவால்டோ காட்டு யானை : காயத்திற்கு சிகிச்சை அளிக்க முடிவு..!!

5 May 2021, 7:38 pm
rivaldo - updatenews360
Quick Share

நீலகிரி : நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

வாழைத்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக ரிவால்டோ என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட காட்டுயானை குடியிருப்பு பகுதியில் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து, வனத்துறையினர் அந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்க முடிவு செய்து, பழங்கள் கொடுத்து அழைத்துச் சென்றனர்.

குறிப்பிட்ட தூரம் வரை வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காட்டு யானை திடீரென வனப்பகுதிக்குள் சென்றது. மேலும், அந்த யானை சுற்றித்திரிந்த கிராம பகுதியான வாழைத்தோட்டம் பகுதிக்கே மீண்டும் வந்தது.

இந்நிலையில் வனத்துறையினர் வாழைத்தோட்டம் பகுதியிலேயே அதற்கு கூண்டு அமைத்து தும்பிக்கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதன்படி, இன்று ரிவால்டோ என்னும் அந்த காட்டு யானை தானாக கூண்டுக்குள் வந்து வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

தொடர்ந்து யானைக்கு உணவு அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். நீண்ட நாட்களாக வாழைத்தோட்டம் பகுதியிலேயே சுற்றி வந்த காட்டு காட்டுயானையால் அச்சத்துடன் இருந்து வந்த அக்கிராம மக்கள், இன்று யானை கூண்டுக்குள் அடைக்கப்பட்டது தங்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளதாகவும், இரவு, பகல் நேரங்களில் எந்த அச்சமும் இல்லாமல் இருக்க முடியும் என்றும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Views: - 119

1

0