கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி.. பாஜக மாவட்ட தலைவரின் மறுமுகம்.. அதிரடி கைது..!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2024, 11:12 am

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி.. பாஜக மாவட்ட தலைவரின் மறுமுகம்.. அதிரடி கைது..!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இளைஞர் ஒருவர் அந்த வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர்களை மடக்கி கத்தியை காட்டி பணம் பறிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜய் (37) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டியவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

விசாரணையில் அவர் பள்ளிகொண்டா கட்டுப்புடி தெருவை சேர்ந்த கிளி (எ) சதீஷ் (37) என்பது தெரியவந்தது.

மேலும் படிக்க: பிரதமர் மோடி மீது அவதூறு பரப்ப ரூ.100 கோடி பேரம்… பரபரப்பு புகார் : சிக்கலில் ஆளும்கட்சி…!!

இவர் வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட தலைவராக இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சதீஷ் மீது மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இவர் மீது கொலை, வழிப்பறி என பல்வேறு குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!