திருடும் போது வீட்டு உரிமையாளரிடம் சிக்கிய கொள்ளையர்கள் : லுங்கி சிக்கியதால் உள்ளாடையுடன் எஸ்கேப்.. சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2022, 2:29 pm
Theft Escape -Updatenews360
Quick Share

திருவள்ளூர் : பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 லட்சம் ரூபாய் மற்றும் 1 சவரன் தங்க நகைகளை திருடர்கள் திருடி தப்ப முயன்றபோது உரிமையாளரிடம் சிக்கி லுங்கியை கழற்றிவிட்டு ஜட்டியுடன் தப்பி சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே பல்லவன் திருநகரில் கடந்த 10 ஆண்டுகளாக ராஜேஷ் (வயது 37) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் செங்கல்பட்டு மாவட்டம் பிலாப்பூர் கிராமத்தில் பூர்வீக வீட்டிற்கு பொங்கல் அன்று காலை சென்றிருந்தார்.

பின்னர் தனது மனைவி ரேவதி (வயது 30), மாமனார் ஸ்ரீனிவாசன் (வயது 60), தாய் கோகிலா (வயது 50) மற்றும் அவரது இரு குழந்தைகளுடன் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் கேட் பூட்டப்பட்டும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷின் மாமனார் மற்றும் தாய் ஆகியோர் உள்ளே சென்று பார்த்தபோது இருவர் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

மாமனார் சீனிவாசன் மற்றும் அம்மா கோகிலா ஆகிய இருவரையும் தாக்கிய திருடர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இருப்பினும் அவரது மாமனார் சீனிவாசன், திருடர்களை பிடித்துள்ளார். ஆனால் அதில் ஒரு திருடன் தான் அணிந்திருந்த லுங்கியை அவிழ்த்து விட்டு உள்ளாடையுடன் அங்கிருந்து தப்பினான்.

இதனையடுத்து மணவளநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
….

Views: - 224

0

0