காலம் மாறிப் போச்சு… விநாயகருக்கு பூஜை செய்யும் ரோபோ : தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த விசித்திரம்.. வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2023, 5:49 pm
Robo Vinayagar -Updatenews360
Quick Share

காலம் மாறிப் போச்சு… விநாயகருக்கு பூஜை செய்யும் ரோபோ : தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த விசித்திரம்.. வீடியோ!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் கல்லூரி, பள்ளிக்கூடங்களிலும் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விநாயகர் சிலை வைத்து விநாயகனை சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடி வழிபட்டனர்.

அப்போது பொறியியல் துறையான மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை மாணவர்களால், உருவாக்கப்பட்ட ரோபோ விநாயகருக்கு தீப ஆராதனை காட்டியது. விநாயகனுடன் விஞ்ஞானமும் இணைந்து பக்தர்களை பரவசப்படுத்தியது.

Views: - 110

0

0