தங்க பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு “கேல் ரத்னா விருது” – மத்திய அரசு அறிவிப்பு..!

21 August 2020, 5:49 pm
Quick Share

மாற்றுத் திறனாளர்களுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரியப்பன், இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய 5 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்க வேண்டும் என, விளையாட்டு அமைச்சகத்தைச் சோ்ந்த 12 போ் கொண்ட தோ்வுக் குழுவால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மாற்றுத் திறனாளர்களுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றதற்காக மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது பரிந்துரைக்கப்பட்டது.

அதேபோல், சிறந்த பேட்டிங்கிற்காக ரோஹித் சர்மாவிற்கும், 2018 காமென்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றதற்காக மல்யுத்த வீரர் வினேஷ் போகட்டுக்கும் கேல் ரத்னா விருது பரிந்துரைக்கப்பட்டது.

இந்தநிலையில், விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரதனா விருது மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகட் மற்றும் மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் ஆகியோர் பெயல் இடம் பெற்றுள்ளது.

Views: - 1

0

0