நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த ரவுடி:அலேக்காக தூக்கிய போலீசார் !

Author: Udhayakumar Raman
4 December 2021, 6:22 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடியில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகர் 56 வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் என்கின்ற குள்ள பிரசாத் 28 இவர் மீது வியாசர்பாடி , எம்.கே.பி நகர் , கொடுங்கையூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை , அடிதடி , திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.இந்நிலையில் எம்.கே.பி நகர் பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து இவர் கடந்த 5 மாதங்களாக  நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனையடுத்து இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் பேரில் வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாடு அருகே எம்.கே.பி நகர் போலீசர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது குள்ள பிரசாத்தை  கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 185

0

0