குவாட்டருக்கு ரூ.10 கூடுதல் : அமைச்சரே சொன்னாலும் அப்படித்தான்.. டாஸ்மாக் விற்பனையாளரின் திமிர் பேச்சு!வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2021, 7:05 pm
Tasmac Liquor Sale Issue -Updatenews360
Quick Share

சென்னை : மணலி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக மதுப்பிரியர் மற்றும் விற்பனையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை மணலி அருகே சின்னமாத்தூர் ஆர்ம்ஸ்ட்ராங் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதல் விலை வைத்து மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த கடையில் மது வாங்க சென்ற வாடிக்கையாளர் குவார்ட்ர் மற்றும் ஆஃப் வகையான பாட்டில்களை வாங்கியுள்ளார். ஆனால் நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் கேட்டுள்ளார்.

இதைத்தட்டிக் கேட்ட மதுப்பிரியருக்கு விற்பனையாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. தற்போது டாஸ்மாக் கடையில் வாங்கும் மதுபானங்களுக்கு பில் கொடுக்க வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.

ஆனால் எந்த கடையும் தமிழக அரசின் விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. அதற்கு காரணம் பல டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதுதான்.

இதனைத்தொடர்ந்து வெளியான வீடியோவில், விற்பனையாளரிடம் மதுவாங்கிய மதுப்பிரியர், ஏன் கூடுதலாக 10 ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டால், லோடு மேனுக்கு கொடுக்க வேண்டும் என சாக்கு போக்கு காரணங்களை கூறுகிறார்.

மீறி பில் கேட்டால், வேறு கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்ளவும் என அந்த விற்பனையாளர் கறாராக பேசுகிறார். மேலும் தான் வீடியோ எடுத்து வெளியிட்டுவிடுவேன் என கூறினாலும், கொஞ்சம் கூட பயப்படாத விற்பனையாளர், இப்படித்தான் விற்போம், அமைச்சரே உரிய விலைக்கு விற்பனை செய்ய சொன்னாலும் கூடுதல் விலைக்குத்தான் விற்பனை செய்வோம் என கூறுகிறார்.

வீடியோ எடுத்த மதுப்பிரியர் வேறு வழியின்றி 240 ரூபாய் கொடுத்து குவாட்டரை வாங்கி சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி மதுப்பிரியர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

Views: - 453

0

0