ஆன்லைன் செயலி மூலம் கடன் கேட்ட இளைஞரிடம் ரூ.26 ஆயிரம் மோசடி : தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2022, 4:02 pm
Suicide - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : பெரியபாளையம் அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் கேட்ட வாலிபர் 86 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம் செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட நபரிடம் ஏமாந்த விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் டாக்டர் அம்பேத்கர் நகரில் வசித்து வந்தவர் பிரசாந்த் (வயது 37). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு தனலட்சுமி (வயது 28) என்ற மனைவி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

பிரசாந்த் தனது குடும்ப செலவுக்காக ஆன்லைன் செயலி மூலம் தனியார் நிறுவனத்தில் ரூபாய் 6 லட்சம் கடன் உதவி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

இந்த விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டதாக பேசிய தனியார் கல்வி நிறுவன ஊழியர் கடன் தொகையை பெற ரூபாய் 86 ஆயிரத்தை செலுத்துமாறு தெரிவித்துள்ளார்.

கடன் தொகை தனது வங்கி கணக்கில் வராததால் பிரசாந்த் திருவள்ளூரில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து உறவினர் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து பிரசாந்த் வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Views: - 564

0

0