தங்க நகையில் முதலீடு செய்யக் கூறி ரூ.64 லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் புகார்..!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 4:11 pm
Cbe Fraud Complaint -Updatenews360
Quick Share

கோவை : தங்க நகையில் முதலீடு செய்யக்கோரி ரூ.64 லட்சத்தை மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் திருமணி (41). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரிடம் தங்கத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று ரூ.64 லட்சத்தை சிலர் ஏமாற்றியதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து திருமேணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் தொண்டாமுத்தூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறேன் அப்பொழுது ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ராதா, கதிர்வேல், பாலகிருஷ்ணன், லேகா மற்றும் விஜயா ஆகியோர் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கொடுப்பதாக கூறினர்.

அவர்களை நம்பி எனக்கு தெரிந்த 10 பேரிடம் பணத்தை வசூலித்து, ரூ.64 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தேன்.

ஆனால் நாங்கள் கொடுத்த பணத்தை அவர்கள் திரும்ப கொடுக்க மறுக்கிறார்கள். பணத்தை கேட்கச் சென்றால் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதுகுறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம் எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 104

0

0