பிரபல மெத்தை நிறுவனத்தில் ரூ.7.50 லட்சம் கொள்ளை : சிக்காமல் இருக்க சிசிடிவி ஹார்டு டிஸ்க்கும் திருட்டு!!

8 April 2021, 2:02 pm
Cotton shop Theft -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : மார்த்தாண்டத்தில் பிரபல மெத்தை நிறுவனத்தில் ரூ.7 50 லட்சம் கொள்ளைடியத்த மர்மநபர்கள் சிசிடிவி கேமராவில் அடையாளம் தெரியாமல் இருக்க கார்டு டிஸ்க்கையும் எடுத்து சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசுப்புராஜ் என்பவர் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் மொத்தமாக மெத்தை ரக்சின் ,கர்ட்டன் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் பிரமாண்ட ஷோரூம் நடத்தி வருகிறார்.

இவர் வழக்கம்போல இன்று காலை 10 மணிக்கு கடையை திறந்துள்ளார். அப்போது தனது பட்டறையை பார்க்கும்போது அதில் வைத்திருந்த ரூ. 7. 50 லட்சத்தை காணாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதே போல முதல் மாடியில் மேற்கூரை உடைக்கப்பட்டு உள்ளே புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

கொள்ளையன் பக்கத்து காம்ப்ளக்சில் மாடிப்படி வழியாக ஏறி மெத்தை ஷோரூமின் மேல் மாடி காங்கிரீட் சீட்டை உடைத்து அதன் வழியாக வந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் சிசிடிவி கேமரா வழியாக பதிவான காட்சிகளை பார்த்து குற்றவாளியை அடையாளம் கண்டு கொள்வார் என தெரிந்து, கம்ப்யூட்டரில் இருந்த ஹார்டுடிஸ்கை எடுத்து சென்றுள்ளான்.

தேர்தல் வேலை என்பதால் பணத்தை கொண்டு செல்லாமல் அங்கே பணத்தை வைத்திருந்தது அவர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இது குறித்து உரிமையாளர் சிவா சுப்புராஜ் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 4

0

0