நிலத்தை அளந்து பார்க்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் : பெண் நில அளவையரும் உடந்தையாக இருந்த கணவரும் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2021, 7:29 pm
Surveyor Arrest - Updatenews360
Quick Share

விழுப்புரம் : வீட்டுமனை பிரிவு நில அளவைக்கு லஞ்சம் வாங்கிய விக்கிரவாண்டி நில அளவையர் ஸ்ரீதேவியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கணவரையும் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது அரும்புலி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் கருணாகரன். இவர் தனக்கு சொந்தமான வீட்டுமனை பிரிவை அளந்து கொடுப்பதற்காக விக்கிரவாண்டி நில அளவை பிரிவுக்கு மனு செய்திருந்தார்.

அந்த வகையில் வீட்டுமனை பிரிவு அல்லது கொடுப்பதற்காக நில அளவையர் ஸ்ரீதேவி ரூபாய் 7,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கருணாகரன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

அதன் பின்னர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கருணாகரன் வழங்கினார். இந்த நிலையில் இன்று ஸ்ரீதேவி ரூபாய் 7,000 லஞ்சம் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

பணத்தை வாங்கி கொடுத்ததற்கு உதவியாக இருந்த ஸ்ரீதேவியின் கணவர் வெற்றிவேலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Views: - 198

0

0