கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

Author: kavin kumar
4 October 2021, 10:57 pm
Quick Share

சென்னை: கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக ரூ.1,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்துக்கு விமான ஓடுபாதைக்காக நில உரிமையாளர்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான நிலுவை தொகை ரூ.1,132 கோடியை விடுவித்து போக்குவரத்து துறை அரசாணை வெளியிட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்ட போது உரிமையாளர்களுக்கு 4 கட்டங்களாக ரூ.308 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு இருந்தது. நிலம் வழங்கிய மற்றவர்களுக்கு இழப்பீட்டை உடனடியாக விடுவிக்க மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆட்சியரின் கோரிக்கையை ஏற்று ரூ.1,132.74 கோடி நிதி ஒதுக்கி போக்குவரத்து துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Views: - 242

0

0