கோடி கோடியாக சம்பளம்.. தெருக்கோடியில் பேரம்.. வைரலாகும் நயன்தாராவின் வீடியோ : கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2021, 1:34 pm
Nayanthara Bargaining Video -Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைப்பட்டு வருகிறார். கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா இயக்குநர் ஹரி மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

சரத்குமார் நடப்பில் வெளியான ஐயா படத்தில் கொழுக் மொழுக் என நடித்த நயன்தாராவை ரசிகர்கள் உருகி உருகி பாராட்டினர். பின்னர் தனது உடல் எடையை குறைத்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயரும் புகழும் சம்பாதித்தார்.

எந்தளவுக்கு நடிப்பில் கொடிகட்டி பறந்தாரோ அதே அளவில் காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். பின்னர் காதல் தோல்வி என தனிப்பட்ட வாழ்க்கையில் அடிவாங்கினாலும், தன்னுடைய நடிப்பால் மீண்டும் கொடி கட்டி பறந்தார். ஹீரோவுக்கு சமமான கதாபாத்திரங்களில் நடிக்க பட வாய்ப்புகள் குவிந்தன.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நயன்தாரா, தற்போது ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். இது தவிர ‘நெற்றிக்கண்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகியப் படங்களும் நயன்தாராவின் கைவசம் உள்ளது.

விஜய்சேதுபதியுடன்‘நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்ததன் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்த நயன்தாரா, பல இடங்களுக்கு ஜோடியாக வலம் வருகின்றனர். இவர்கள் எங்கு சென்றாலும் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். அதோடு, மும்பையிலுள்ள சித்தி விநாயகர், மஹாலட்சுமி கோவில், மும்பதேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளனர்.

அப்போது ரோட்டோர கடையில் நயன்தாரா பேரம் பேசுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. பேக் கடையில், குறைந்த விலைக்கு பேக்கை கொடுக்குமாறு, அவர் பேரம் பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு கோடி கோடியாக சம்பளம் வாங்கும் நடிகை தெருக்கோடியில் பேரம் பேசுவது நியாயமா என்ற எதிர்ப்புகுரலும் உலா வருகிறது.

Views: - 767

9

9