வேலை சுமூகமா முடியனுமா.. ரூ.3.50 லட்சம் கொடுங்க.. ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்ட உதவி கோட்ட பொறியாளர் கைது

Author: Babu Lakshmanan
11 May 2022, 10:48 am

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஒப்பந்ததாரரிடம் ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

சேலம் – தலைவாசல் வீரகனூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர், தெடாவூர் – தம்மம்பட்டி சாலையை விரிவாக்கம் செய்ய டெண்டர் மனு அளித்திருந்தார். அதன்படி, இவருக்கு டெண்டரும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்குவதற்காக, ஆத்தூர் உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரனிடம் பணி ஒப்பந்தச் சான்று வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு ரூ.3.50 லட்சம் கமிஷன் தொகையும், பணி முடிந்த பிறகு, 12 சதவிதம் கமிஷனாக, அதாவது ரூ.78.53 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.

இதனால், அதிர்ந்து போன ஒப்பந்ததாரர் சுந்தர்ராஜ், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின்படி, நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரிடம், அவரது அலுவலகத்தில் வைத்து ரூ.3.50 லட்சம் பணத்தை சுந்தர்ராஜ் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், பொறியாளர் சந்திரசேகரை கையில் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?