முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் ஒரு தலைபட்சமா..! (வீடியோ)

14 February 2020, 8:05 pm
Salem Cm Trophy -updatenews360
Quick Share

சேலம் : முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் தகுதியற்ற நடுவர்களை வைத்து தகுதி இல்லாத மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பை அளிப்பதாக பயிற்சியாளர்களும் வீரர் மற்றும் வீராங்கனைகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் சேலம் மகாத்மா காந்தி விலையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல், வாலிபால், பாக்சிங், இறகு பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 1200 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்த விளையாட்டு வீரர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற தகுதி பெறுகின்றனர்.

இந்த வருடம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தியதால் தமிழகத்திலேயே சேலத்தில் மட்டும் அதிமான விளையாட்டு வீரர்கள் பதிவு செய்து பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இதனிடையே மாவட்ட விளையாட்டு துறை சார்பாக நடைபெற்று வரும் இந்த தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தகுதியற்ற நடுவர்கள் மற்றும் தகுதியற்ற வீரர் வீராங்கனைகள் பங்கேற்க வைத்து அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை அளித்து வருவதாக ஒவ்வொரு விளையாட்டிலும் சம்பந்தப்பட்ட பயிற்சியாளர்களும் வீரர் வீராங்கனைகளும் குற்றச்சாட்டை எழுப்பி மைதானத்திலேயே போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாக்ஸிங் எனப்படும் குத்துச்சண்டை போட்டியின் பயிற்சியாளர் மற்றும் வீரர்-வீராங்கனைகள் உட்பட பல்வேறு விளையாட்டுப் பிரிவு நிர்வாகிகள் கூறும்போது தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான நடத்தப்படும் இந்த போட்டியில் சேலம் மாவட்ட விளையாட்டு துறை தகுதியற்ற நடுவர்களை வைத்து தகுதியற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்து வருவதாகவும் இது தங்களால் ஏற்கமுடியாது என பல்வேறு போராட்டங்கள் நடத்தி காவல்துறையினர் தங்களை சமாதானப்படுத்தினார்கள் தவிர நிர்வாகத்திடம் இதுவரை பேசவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

இதன் காரணமாக தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் தகுதியற்ற நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் கையால் கோப்பைகள் வாங்க உள்ளனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.