காதலியுடன் ஓட்டம் பிடித்த மகன்… பெண்ணின் வீட்டாரால் காதலனின் தந்தைக்கு நேர்ந்த கதி… சேலத்தில் பரபரப்பு

7 April 2021, 4:51 pm
salem murder - updatenews360
Quick Share

சேலம் அருகே காதலில் ஏற்பட்ட தகராறில் காதலனின் தந்தை வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட செங்கான்வளவு பகுதியைச் சேர்ந்த கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி தங்கவேலு. இவருக்கு சின்னம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இவரது 2வது மகன் பிரகாஷ், அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா என்றை பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதையறிந்து ஆத்திரமடைந்த சந்தியாவின் குடும்பத்தினர், தங்கவேலுவின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது, இரு தரப்பினரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அதில், பிரகாஷின் தந்தை தங்கவேலுவை சந்தியாவின் குடும்பத்தினால் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, தங்கவேலுவின்‌ உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகனின் காதல் விவகாரத்தில் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 65

0

0