சேலம் டாஸ்மாக் அலுவலகத்தில் குவிந்த தீபாவளி வசூல் : லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.. ரூ. 1.21 லட்சம் பறிமுதல்!!

14 November 2020, 2:32 pm
raid - updatenews360
Quick Share

சேலத்தில் டாஸ்மாக் பொதுமேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மல்லூர் அருகே உள்ள சந்தியூர் அருகே தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் டாஸ்மாக் மொத்த விற்பனை கிடங்கு இயங்கி வருகிறது. இந்த கிடங்கில் இருந்து அங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 250க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மதுபானங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அம்பாயிரம் என்பவரின் அலுவலகமும் இங்கு செயல்பட்டு வருகிறது. இதனிடையே, டாஸ்மாக் அலுவலகத்தில் தீபாவளி மாமூல் வசூலிப்பதாக எழுந்த புகாரையடுத்து, சேலம் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் இன்னும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

Views: - 19

0

0

1 thought on “சேலம் டாஸ்மாக் அலுவலகத்தில் குவிந்த தீபாவளி வசூல் : லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.. ரூ. 1.21 லட்சம் பறிமுதல்!!

Comments are closed.