வீடு கட்டுவதற்காக தோண்டிய குழியில் இருந்த சாமி சிலைகள்: கோவிலில் இருந்து திருடி வரப்பட்டதா என தீவிர விசாரணை…!!

Author: Rajesh
19 May 2022, 5:47 pm
Quick Share

திருவாரூர்: ஆலங்குடி பகுதியில் வீடு கட்டுவதற்காக தோண்டிய குழியில் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடி பகுதியில், மண்டித் தெருவில் வசிக்கும் முத்து என்பவர் அவரது இடத்தில் வீடு கட்டுவதற்காக ஜேசிபி எந்திரத்தின் மூலமாக குழி பறித்துள்ளார்.

அப்போது வெட்டப்பட்ட குழிக்குள் சுமார் 3 அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை, 1 அடி உயரமுள்ள அப்பர் சிலை மற்றும் சிறிய வகை சிலைகள் அடங்கிய உலோக கலையம் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த வலங்கைமான் வட்டாட்சியர் சிலைகளை ஆய்வு செய்தார்.

கைப்பற்றப்பட்ட சிலைகள் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வீடு கட்டும் பணியை நிறுத்தி வைக்கும்படி வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Views: - 309

0

0