கழுகை விரட்ட அண்ணன் வைத்த குறி.. குறுக்கே வந்த மகன் ; ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த தங்கை.. 2 பேர் கைது!!!

Author: Babu Lakshmanan
23 April 2024, 5:00 pm
Quick Share

சேலம் ; சங்ககிரி அருகே அண்ணன்கள் கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து தங்கை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி தாலுக்கா கட்டயகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (35), கார் டிரைவர். இவருக்கும் சங்ககிரி அருகே வேங்கிபாளையம் பாப்பாங்காட்டை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ரித்திக் ஸ்ரீ (10), என்ற மகனும், தனிஷ்கா ஸ்ரீ(6), என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழரசி தனது கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு சங்ககிரியில் உள்ள பாப்பாங்காட்டில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில், கடந்த 21ம் தேதி தமிழரசியின் அண்ணன் சரத்குமாரும், அவரது பெரியப்பா மகன் சதீஷ்குமாரும் வீட்டு அருகே உள்ள பகவதி அம்மன் கோவில் முன்பு உள்ள இச்சி மரத்தில் கோழி குஞ்சை தூக்க வரும் கழுகை விரட்ட ஏர்கன் துப்பாக்கியில் குண்டை போட்டு மரத்திற்கு கீழ் உள்ள திண்ணையில் வைத்திருந்துள்ளனர்.

மேலும் படிக்க: தேர்தல் நாடகமாடிய திமுக அரசு… சிப்காட் முதல் வள்ளலார் விவகாரம் வரை ; அண்ணாமலை கிளப்பிய சந்தேகம்…!!!

அப்போது, அங்கு இருந்த சரத்குமாரின் நான்கு வயது மகன் அந்த துப்பாக்கியின் ட்ரக்கை அழுத்தியதால் அதிலிருந்து வெளியேறிய குண்டு அங்கு சென்று கொண்டிருந்த தமிழரசியின் வயிற்றில் பட்டு காயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்துவர்கள் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இது குறித்து தமிழரசியின் கணவன் முருகேசன் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினி, எஸ்ஐ கருணாகரன் ஆகியோர் ஏர்கன் துப்பாக்கியில் குண்டைபோட்டு டிரக்கர் பிரஸ்ஸை அழுத்தினால் அதிலிருந்து குண்டு வெளியேறி, யார் மீதாவது பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தே, மரத்தின் கீழ் ஏர்கன் வைத்திருந்த குற்றத்திற்காக சரத்குமார் (34), சதீஷ்குமார் (38)ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 176

0

0