கோவில் கோவிலாக சுற்றும் சசிகலா : பண்ணாரி அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கி பக்தி பரவசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2022, 6:34 pm

ஈரோடு : ஆன்மிக பயணத்தில் இருக்கும் சசிகலா சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி கோவிலில் சாமி தரிசனர் செய்தார்.

பல்வேறு மாவட்டங்களில் ஆன்மீகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் திருமதி. சசிகலா இன்று சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அங்குள்ள ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். அதனை தொடர்ந்து ஏராளமான கட்சி தொண்டர்கள் புடைசூழ பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்குச் சென்றார். அங்கும் சாமி தரிசனம் செய்துவிட்டு கட்சித் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?