சாத்தான்குளம் இரட்டை கொலை : காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவு

3 September 2020, 12:08 pm
sridhar - updatenews360
Quick Share

மதுரை : சாத்தான் குளம் இரட்டை கொலை சம்பவம் வழக்கில் கைதாகியுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க சி.பி.ஐ.க்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கை மீறி கடை வைத்ததாகக் கைது செய்யப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. கைது செய்யப்பட்ட காவலர்களை தங்களின் காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனிடையே, தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி கைதாகியுள்ள காவலர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வழக்கு தொடர்பான ஆவணங்களை தடய அறிவியல் துறை சேகரித்துவிட்டதாகவும், வழக்கில் விசாரணையும் முடிவடைந்துவிட்டதால் ஜாமீன் வழங்க காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைக் கேட்ட நீதிபதி பாரதிதாசன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளார்.

Views: - 6

0

0