மனைவியின் குடும்பத்தை வெட்டித் தள்ளிய கணவன்.! ஒருவர் பரிதாப பலி.!!

3 August 2020, 11:13 am
Sathy Family Attacked - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே குடும்பத் தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை வெட்டித் தள்ளியதலி மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அக்கரைதத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா. இவரது காதல் கணவர் வீரமணிகண்டனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான பவித்ரா தனது தந்தை சாஸ்தா மூர்த்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை எழுந்து குழந்தைகள் இருவரில் ஆளுக்கு ஒருவர் என எடுத்து வளர்த்துக் கொள்வது என ஊர் பெரியவர்கள் முன்னிலையில் முடிவாகியுள்ளது.

இரண்டு வயதுடைய பெரிய மகனை வீரமணிகண்டனும், 9 மாத இளைய மகன் கிருத்திக்கை பவித்ராவும் வளர்த்து வந்தனர். நேற்றிரவு பவித்ராவின் வீட்டுக்கு வந்த கணவர் வீரமணிகண்டன் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது ஆத்திரமடைந்த வீரமணிகண்டன், பவித்ராவை அரிவாளால் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டியுள்ளார். அதனை தடுக்க வந்த பவித்ராவின் தந்தை சாஸ்தாமூர்த்தி, தாயார் அமுதா, பாட்டி சித்தம்மாள் ஆகியோரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பவானிசாகர் காவல்துறையினர் அனைவரையும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பவித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மனைவியை கொலை செய்த கணவர் வீரமணிகண்டன் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் ஆகியோரை கைது செய்த பவானிசாகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 11

0

0