‘இப்ப பேனா.. அப்பறம் மூக்கு கண்ணாடியா..?’ கருணாநிதியோட சொத்தை அரசுடமையாக்க முடியுமா..? சவுக்கு சங்கர் கேள்வி!!

Author: Babu Lakshmanan
1 February 2023, 7:10 pm

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நினைவாக கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னையில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, பாஜக, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால், அவர்களுக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மெரினா கடற்பகுதிக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதை எதிர்ப்பதாக தெரிவித்தார். மேலும், பேனா நினைவு சின்னத்தை மெரினா கடலில் வைத்தால், நானே ஒருநாள் அதனை உடைப்பேன் என்று ஆவேசமாக கூறினார்.

இந்த நிலையில், இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், மக்களின் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், முரசொலி உள்பட திமுக தலைவர் கருணாநிதிக்கு குடும்பத்திற்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களிடம் உள்ள ரூ.10,000 கோடி சொத்துக்களை வைத்து இந்த சிலையை வைக்கலாமே..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Savukku Shankar - Updatenews360

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களும் கருணாநிதியை ஏற்றுக் கொண்டு விட்டார்களா..? என்றும், அதிமுகவை போல திமுக கட்சியும் தங்களுக்கு சொந்தமான இடத்தில் சிலை வைத்து கொள்ளலாமே என்றும் கூறினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த துணவு படத்தில் கிடைத்த வருமானத்தை வைத்து கட்டினால், தற்போதைய அளவீட்டை விட மிகவும் பெரியதாக கட்டலாம் என்றும் சவுக்கு சங்கர் கூறினார்.

அரசு சார்பில் கடலில் நினைவு சின்னம் அமைக்கும்பட்சத்தில், கருணாநிதியின் சொத்துக்களை அரசுடமையாக்க தயாரா..? என்று கேள்வி எழுப்பினார். மேலும், இப்போது பேனா.. பிறகு மூக்கு கண்ணாடிக்கு சிலை வைப்பீர்களா..? என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

  • savukku shankar said that red giant movies company plan to flop jana nayagan movie ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…