மாணவர்களுக்கு ரெஸ்ட்..! ஆன்லைன் கல்வியில் அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த டுவிஸ்ட்..!

9 September 2020, 12:08 pm
Quick Share

5 நாட்களுக்கு ஆன்லைன் கல்வி நிறுத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி , கல்லூரி உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. தற்போது 4ஆம் கட்ட தளர்வு அறிவிக்கப் பட்டுள்ளதால் வரும் 21ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்போது 9 முதல் 12ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் ஆரியர்களிடம் தங்கள் சந்தேகங்களை நேரில் சென்று கேட்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பாடங்கள் புரியதா காரணத்தினாலும், போதிய இணைய வசதி, செல்போன்கள் இல்லாத காரணத்தினாலும், மாணவர்கள் தற்கொலை செய்யும் அபாயம் நிலவுகிறது. தொடர்ந்து, பாடம் எடுப்பதால் மாணவர்களினின் மனநிலை பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 5 நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா? என்பது குறித்து பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். மேலும் கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை, கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர்தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்.

Views: - 0

0

0