காதல் மன்னனாக மாறிய பள்ளி ஆசிரியர்… காதல் வலையில் வீழ்த்தி 8ம் வகுப்பு மாணவியை கடத்திய அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
26 April 2022, 9:26 pm
Quick Share

தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அதேப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் காதல் வலையில் வீழ்த்தி கடத்தி சென்றவரை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 8 ம் வகுப்பு மாணவி கடந்த 21ந் தேதி முதல் காணவில்லை என பெற்றோர் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது, அப்பள்ளியில் உள்ள ஆசிரியர் கிருஷ்ணகிரி மாவட்டம் புலியூர் பகுதியை சேர்ந்த முபாரக் என்பவர் பள்ளி மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது. காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முபாரக்கை தேடி வந்தனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டிணத்தில் காவல் துறையினர் வாகன சோதனையின் போது முபாரக் மாணவியை பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது காவல்துறையினர் நிறுத்தி விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார். தீவிரமாக விசாரணை செய்த போது பள்ளியில் படிக்கும் மாணவியை ஆசிரியர் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

பின்னர் சேலம் காவல்துறையினர் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் காவல்நிலையத்தில் மாணவியையும் ஆசிரியர் முபாரக்கையும் ஒப்படைத்தனர். இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பள்ளி சிறுமியை கடத்திய ஆசிரியர் முபாரக்கை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் உத்தரவின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், பள்ளி சிறுமியிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 665

0

0