கல்லுக் குழியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் : நீரில் மூழ்கி +2 மாணவர்கள் இரண்டு பேர் பரிதாப பலி..!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2022, 1:38 pm
+2 Students Dead - Updatenews360
Quick Share

கோவை : கல்லுக் குழியில் குளிக்கச் சென்ற +2 மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காளியாபுரம் சின்னைய கவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 17) மற்றும் க.க. சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார் (வயது 17) ஆகிய இருவரும் டவுன்ஹால் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்களுடன் சேர்ந்து நண்பர்கள் 3 பேரும் காளியாபுரம் பகுதியில் உள்ள கல்லு குழியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது தண்ணீரில் இருவர் மட்டும் சிக்கிக்கொண்டுள்ளனர். உடனடியாக கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் சஞ்சய் மற்றும் சஞ்சய் குமார் தண்ணீரில் தேடி வந்த நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

நீண்ட நேரம் தேடுதலுக்கு பின் சடலமாக கிடைக்கப்பட்ட இருவரின் உடலும் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் மாணவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 137

0

0