மகளின் பிறந்தநாளன்று மரணமடைந்த தீயணைப்பு வீரர் : இரவு பணியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2022, 1:16 pm
Fireservice man Dead - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : திண்டுக்கல் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் இரவு பணியின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அடுத்த பித்தளை பட்டியைச் சேர்ந்தவர் வித்யாபதி (48). இவர் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலராக உள்ளார். வழக்கம் போல் நேற்று இரவு பணிக்கு வந்தார். இந்நிலையில் இன்று காலை தீயணைப்பு நிலையத்தில் மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த சக ஊழியர்கள் இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இவருக்கு இந்திரா என்ற மனைவியும், திவ்யதர்ஷினி(24) என்ற மகளும், தட்சிணாமூர்த்தி(19) என்ற மகனும் உள்ளனர். திவ்ய தர்ஷினி இன்று நடைபெறும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத சென்று விட்ட காரணத்தினால் தந்தை இறப்பு குறித்து அவருக்கு தெரியாது. மேலும் திவ்யதர்ஷினிக்கு இன்று பிறந்த நாள் ஆகும். இந்த சம்பவம் தீயணைப்புத்துறை காவலர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 506

0

0