மாணவியின் செல்போனுக்கு ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை : போக்சோவில் அரசுப்பள்ளி ஆசிரியர் அரெஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2022, 2:21 pm
School Sex Torture Arrest - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உடுமலைப்பேட்டை காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் முத்துப்பாண்டி. இவரது மகன் மணிகண்டராஜ் (வயது 42) தாராபுரம் அருகே உள்ள தாசர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவி (வயது 15) ஒருவருக்கு ஆசிரியர் மணிகண்டன்ராஜ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்காக உருவாக்கப்பட்ட தனி வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள மாணவியின் நம்பரை எடுத்து மாணவியின் தனி நபருக்கு ஆபாச வசனங்கள் ஆபாச போட்டோக்கள் மற்றும் பாலுணர்வை தூண்டும் வீடியோக்களை அனுப்பி உள்ளார்.

அதோடு இது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என அவர் மாணவியை மிரட்டி உள்ளதாகவும் தெரிகிறது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி இதுபற்றி தனது தாயாரிடம் தெரிவித்தார்.

பின்னர் மாணவியின் தாயார் அரசு பள்ளி தலைமையாசிரியர் வித்யாவிடம் தெரிவித்தார். பள்ளி ஆசிரியர் துரித நடவடிக்கையால் சைல்டு ஹெல்ப் லைன் மற்றும் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது . புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்லம் விசாரணை நடத்தி ஆசிரியர் மணிகண்ட ராஜ்ஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Views: - 1111

0

0