கொரோனாவை தாக்கத்தை பொறுத்தே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் : அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan28 ஜனவரி 2022, 7:30 மணி
புதுச்சேரி : பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளி – கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் உடன் ஆலோசனை நடத்திய பின் அறிவிக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சிரித்துள்ளார்
புதுச்சேரி சிறையில் சமீபகாலமாக செல்போஃன் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகின்றது, இதனை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறை மற்றும் சிறைதுறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாகவும் நீண்ட நாட்களாக சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்கள் விடுதலை செய்வது குறித்தும் கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமை செயலர், காவல் துறை மற்றும் சிறை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் முதலமைச்சர் உடன் கலந்து பேசி பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
கொரோனா தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து கல்வி துறை அறிவிக்கும்.
அதே போல் தேர்வுகள் நடத்துவது குறித்து கல்வி துரை இயக்குனர், செயலருடன் ஆலோசித்து தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் எனவும் அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்தார்.
புதுச்சேரி சிறைச்சாலையை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும், சிறையில் செல்போன் பயன்பாடு, கஞ்சா மற்றும் போதை பொருட்களின் புழக்கம் குறித்து புகார்கள் வந்த வன்னம் உள்ளது.
இது தொடர்பாக அரசு உடனடியாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், சமீபத்தில் கூட இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சிறையில் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக ஜாமர் கருவிகள் செயல்பாட்டில் உள்ளதாக சிறை துறை தெரிவித்துள்ளது.
ஆனாலும் ஜாமர் கருவிகளை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் சிறைக்கு ஒரு குழு அமைத்து அரசு கண்காணிக்கும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சிறையில் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் கைதிகளுடன் தொடர்பு வைக்கும் சிறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
0
0