இனியும் வெயிட் பண்ண முடியாது : டிசம்பர் 6ம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.. அமைச்சர் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2021, 6:51 pm
Pondy School Open - Updatenews360
Quick Share

புதுச்சேரி : டிசம்பர் 6 முதல் புதுச்சேரியில் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. அந்த வகையில் புதுச்சேரியிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது.

அதன் பின்பு கொரோனா பரவல் குறைந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என்றிருந்த போது கனமழை, வெள்ளம் போன்ற காரணங்களால் பள்ளி திறப்பு தள்ளிப்போனது.

இனி எப்போது திறப்பது என்பது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்பொழுது டிசம்பர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 6 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 289

0

0